1. செய்வினை வாக்கியம் & செயப்பாட்டு வினை வாக்கியம்.
நாம் ஒரு நிகழ்ச்சி எப்போது நடந்தது, யாரால் நடந்தது அல்லது எதனால் நடந்தது, இதனால் என்ன விளைவானது ஏற்பட்டது, அந்த விளைவாள் பாதிக்கப்பட்டது யார் அல்லது எது என்பதை தெளிவாக விவரிக்கவே செய்வினை (Active voice), செயப்பாட்டு வினை (Passive voice) வாக்கியங்கள் பயன்படுகிறது.
முதல் கேள்வியான 'எப்போது' என்பது. அந்த நிகழ்ச்சியானது நிகழ்காலத்திலா (Present Tense), இறந்தகாலத்திலா (Past Tense) அல்லது எதிர்காலத்திலா (Future Tense) என்பதை அறிய பயன்படுகிறது.